மேலும் செய்திகள்
செங்கையில் விநாயகர் சிலைகள் கரைப்பு
01-Sep-2025
கெலமங்கலம், கெலமங்கலத்தில், 17 விநாயகர் சிலைகள் நேற்று நீர்நிலையில் கரைக்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், படிப்படியாக கரைக்கப்பட்டு வந்தன. 7ம் நாளான நேற்று, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி ஆகியவை சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த மொத்தம், 17 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சின்னட்டி அருகே உள்ள சனத்குமார் நதியில் கரைக்கப்பட்டன.அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை தலைமையில், 220க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், தளி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, 8 விநாயகர் சிலைகள், நேற்று முன்தினம் மாலை தளி பெரிய ஏரியில் கரைக்கப்பட்டன. 80க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
01-Sep-2025