உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைனான்ஸ் ஊழியரை தாக்கியவருக்கு காப்பு

பைனான்ஸ் ஊழியரை தாக்கியவருக்கு காப்பு

ஓசூர், ஓசூர், தென்றல் நகரை சேர்ந்தவர் சத்யபிரியா, 27. இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜன்டாக பணிபுரிகிறார். இந்த தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மத்திகிரி, மத்தம் அக்ரஹாரத்தை சேர்ந்த செல்வகுமாரி, 39, என்பவர், 21 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கியிருந்தார். கடந்த மாத தவணையை செல்வகுமாரி கட்டவில்லை. இதையடுத்து அப்பணத்தை வசூல் செய்ய, நேற்று முன்தினம் சத்யபிரியா சென்றுள்ளார். தவணை தொகையை தர மறுத்த செல்வகுமாரி, சத்யபிரியாவை தாக்கியுள்ளார். இது குறித்து அவர் புகார் படி மத்திகிரி போலீசார், செல்வகுமாரியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி