உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பட்டா கேட்டு ரேஷன் கார்டு ஒப்படைக்கும் போராட்டம்

பட்டா கேட்டு ரேஷன் கார்டு ஒப்படைக்கும் போராட்டம்

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த குன்னத்துார் பஞ்.,க்கு உட்பட்ட வடுகனுாரை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து, நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தங்கள் ஆதார், ரேஷன் அட்டைகளை திரும்ப ஒப்படைப்பதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், கூறுகையில், 'எங்கள் பகுதியில், 70 குடும்பங்கள் உள்ளன. 50 ஆண்டுகளாக இப்பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்கள் முன்னோர் காலத்தில் இப்பகுதி, தரிசு நிலமாகவும், அனாதீன நிலமாகவும் இருந்தது. தற்போது கணினி ஆவணப்படி, மந்தைவெளி புறம்போக்காக உள்ளது. எங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்தது போல், கணினியில் வகை மாற்றம் செய்து, பட்டா வழங்குமாறு, பலமுறை மனு அளித்தும் எங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனால், அரசு எங்களுக்கு அளித்த ஆதார், ரேஷன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க உள்ளோம்' என்றனர்.அவர்களிடம் போலீசார், வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி மனுவை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ