உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் நெடுஞ்சாலையில் மறியல்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் நெடுஞ்சாலையில் மறியல்

போச்சம்பள்ளி, மத்துார் அருகே, முறையான குடிநீர் வழங்கக்கேட்டு, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கிருஷ்ணகிரி- - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், கண்ணன்டஹள்ளி பஸ் ஸ்டாப் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, கண்ணன்டஹள்ளி, அம்பேத்கர் காலனியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்காமல், அதே பகுதியில் போர்வெல் அமைத்து, அந்நீரை வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் மட்டும், வினியோகிக்கப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வினியோகம் செய்யாததால், அருகிலுள்ள விவசாய கிணறுகளில் மக்கள் எடுத்து வந்தனர். எனவே, கண்ணன்டஹள்ளி பஞ்., நிர்வாகம், முறையான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நேற்று காலை, 9:00 மணிக்கு, கிருஷ்ணகிரி- - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், கண்ணன்டஹள்ளி பஸ் ஸ்டாப் அருகே, 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்தனர். அங்கு சென்ற மத்துார் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, மத்துார் பி.டி.ஓ.,க்கள் சாவித்திரி, செல்லக்கண்ணாள் உடனடியாக குடி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், சாலை மறியல் முயற்சியை கைவிட்டு, மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி