உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் தினேஷ் குமார் தலைமை வகித்தார். இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 356 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய தாய் மற்றும் தந்தை இழந்த மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க, டில்லி தேசிய அறக்கட்டளையில் இருந்து பெறப்பட்டுள்ள பாதுகாவலர் நியமன ஆணைகளை, 3 பேருக்கு கலெக்டர் வழங்கினார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் தனஞ்செயன், ஆதி திராவிடர் நல அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ