வீடுகளில் புகுந்த மழைநீர் பொதுமக்கள் கடும் பாதிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, போச்-சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்-கியுள்ளது. காலையில் வெயிலும், மாலை முதல் நள்ளிரவு வரை பெய்யும் மழையால் பல பகுதிகளில் சாலைகளிலும், வீடுக-ளுக்குள் மழைவெள்ளம் புகுந்துள்ளதால், பொதுமக்கள் அவதிய-டைந்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி பழையபேட்டை, ஆசிப் நகர், பழைய பஸ் ஸ்டாண்ட், டி.சி.ஆர்., சர்க்கிள், சோமார்பேட்டை பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் குளம் போல் மழைநீர் தேங்-கியுள்ளது. மழைநீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், திம்மாபுரம் பஞ்.,க்கு உட்பட்ட நாகராஜ மணியகாரபுரம் நகரிலுள்ள, 50க்கும் மேற்-பட்ட வீடுகளில் மழைநீர், கழிவுநீருடன் கலந்து புகுந்ததால் அப்பகுதிக்குள் செல்ல முடியாத சூழல் உள்ளது. பி.டி.ஓ., அலுவலகத்திற்கு அருகிலுள்ள இப்பகுதிக்கு சாக்கடை கால்வாய் அமைக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவ-டிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். அதேபோல பர்கூரில், அரசு மருத்துவமனை, அரசு மகளிர் மேல்-நிலைப்பள்ளி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதிகளில் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளில் நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.