வானவில் மன்ற அறிவியல் கண்காட்சி போட்டிகள்
வானவில் மன்ற அறிவியல்கண்காட்சி போட்டிகள்கிருஷ்ணகிரி, நவ. 21-கிருஷ்ணகிரி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான வானவில் மன்ற அறிவியல் கண்காட்சி போட்டிகள் நேற்று நடந்தன. இதில், 10 ஒன்றியங்களை சேர்ந்த வட்டார அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற, 90 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சி.இ.ஓ., (பொ) முனிராஜ் தலைமை வகித்து அறிவியல் போட்டியை துவக்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் வடிவேல், வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி வரவேற்றார். அறிவியல் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் கருத்துக்களை எடுத்துரைத்தார். இதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அறிவியல், கணித அணுகு முறைகள், நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீர் சேகரிக்கும் முறைகள், உணவு பதப்படுத்துதலில் ஏற்படும் வேதியல் மாற்றங்கள், சுற்றுச்சூழல் மேம்பாட்டில் செயற்கை நுண்ணறிவு அணுகுமுறை போன்ற தலைப்புகளில், ஆய்வு கட்டுரைகள், இயங்கும் மாதிரிகள், காட்சி பொருட்கள் வைத்திருந்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ், ஆஹா குரு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சங்கர், உதவி தலைமை ஆசிரியர் வளர்மதி உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.