மேலும் செய்திகள்
போச்சம்பள்ளி வாரச்சந்தை தொடர் மழையால் 'வெறிச்'
02-Dec-2024
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதி-களில் கடந்த, 2ல், பெஞ்சல் புயல் எதிரொலியால், பலத்த மழை பெய்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய விளை நிலங்கள் என அனைத்து பகுதிகளும் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்-தியது. இந்நிலையில் போச்சம்பள்ளி, குள்ளனுார் பகுதியில் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழை நீர், தர்மபுரி -திருப்பத்துார் சாலையில் குள்ளனுார் பகுதியில் இருந்து தாலுகா அலுவலகம் வரை சாலையில் செல்கிறது. இதனால் இரண்டு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
02-Dec-2024