உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாம்பாறு அணையில் இருந்து 350 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

பாம்பாறு அணையில் இருந்து 350 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

பாம்பாறு அணையில் இருந்து 350 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்ஊத்தங்கரை, அக். 20-கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ளது பாம்பாறு அணை. ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் தொடந்து மழை பொழிந்து வருவதாலும், அருகே உள்ள மாவட்டமான திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை பகுதியிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், பாம்பாறு அணை தனது முழு கொள்ளளவை நெருங்குகிறது. தற்போது நிர்மட்டம், 18.6 அடி உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 350 கன அடி நீர் வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 350 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை