உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்

சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி தாலுகா அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடக்கின்றன. இப்பணியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.அதன் பின், கலெக்டர் தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடக்கின்றன. ஓட்டுச்சாடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு இதுவரை, 94.30 சதவீதம் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடக்கின்றன.வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில் மொத்தம், 2 லட்சத்து, 65,403 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 2 லட்சத்து, 54,564 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டன. இதுவரை, ஒரு லட்சத்து, 56,617 கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடக்கின்றன. சிறப்பு தீவிர திருத்த பணிக்கு அனைத்து வாக்காளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி உதவி தேர்தல் அலுவலர் கீதாராணி, தாசில்தார் ரமேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை