மேலும் செய்திகள்
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
05-Dec-2024
கிருஷ்ணகிரி, டிச. 19-மத்துாரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள விநாயகர் சிலையை கடந்த, 4 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி, நேற்று மத்துார் போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: விநாயகர் சிலை திருடப்பட்டது குறித்து மத்துார் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பழமையான கோவில்களில் உள்ள சுவாமி சிலைகளை, ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டும் என தொடர்ந்து இந்து முன்னணி போராடி வருகிறது. இந்நிலையில் இந்த விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது போன்ற பொக்கிஷங்களை பாதுகாக்க தவறிய அறநிலையத்துறையை கண்டிப்பதோடு, சிலை திருட்டு குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க, இந்து முன்னணி வலியுறுத்துகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
05-Dec-2024