நண்பனை கொல்ல முயன்ற 3 பேருக்கு காப்பு
அஞ்செட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த வண்ணாத்திப்பட்டியை சேர்ந்தவர் தணிகாசலம், 24. கட்டட தொழிலாளி; இவரும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 22, குமார், 31, மற்றும் ராமர் கோவில் பகுதியை சேர்ந்த அருள், 36, ஆகியோரும் நண்பர்கள். கடந்த, 1ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, வேலை பார்த்த கூலியை வாங்க, குமார் வீட்டிற்கு தணிகாசலம் சென்றார். அப்போது, அவரை குமார், தகாத வார்த்தையால் திட்டி கீழே தள்ளி விட, அங்கிருந்த ஆறுமுகம் கத்தியால், தணிகாசலம் வயிற்றில் குத்தினார். பின், 3 பேரும் தப்பினர். தணிகாசலத்தின் அண்ணன் இளையராஜா, 25, அஞ்செட்டி போலீசில் கடந்த, 6ம் தேதி புகார் செய்தார். போலீசார், குமார், அருள் ஆகிய இருவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ஆறுமுகம் நேற்று கைது செய்யப்பட்டார்.