உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி: தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து, வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து, டூவீலர்களில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு, பரிசு பொருட்களை வழங்கியும், தலைக்கவசம் அணிந்து வராத வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசங்களை வழங்கியும், இனிவரும் காலங்களில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது என அறிவுரை வழங்கினார்.புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணி, பெங்களூரு சாலை வழியாக புதுப்பேட்டை ரவுண்டானாவில் முடிவடைந்தது. இதில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திருலோகசுந்தர், உதவி கோட்டப்பொறியாளர்கள் அன்புஎழில், முருகன், கவிதா, உதவிப்பொறியாளர் அன்பரசன், கிருஷ்ணகிரி வளர்மதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி