சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்
ஓசூர்: ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் பாக்கியமணி தலைமை வகித்தார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குழு ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி வரவேற்றார். மத்திகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசன், போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ., ஜெயப்பிரகாஷ், எஸ்.ஐ.,க்கள் அண்ணாதுரை, ராமமூர்த்தி ஆகியோர், சாலை பாதுகாப்பு குறித்து விரிவாக பேசினர். மதுரை டி.என்.ஏ., அமைப்பை சேர்ந்த நரசிம்ம மணி, சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் குறித்து, வீடியோக்கள் மூலம் விளக்கமளித்தார்.தாவரவியல் துறை தலைவர் குமார், புள்ளியியல் துறை தலைவர் கருணாநிதி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மோகனப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ்த்துறை மாணவி சந்தியா, வணிகவியல் (கணினி பயன்பாடு) துறை மாணவர் மயில்சாமி நன்றி கூறினர். ஏற்பாடுகளை, கல்லுாரி இன்ஸ்டிடியூட் மேனேஜ்மென்ட் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் வைரவேல் செய்திருந்தார்