உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கத்தேரிமலை தொட்டிபாலத்தில் கனமழையால் சரிந்த பாறைகள்

கத்தேரிமலை தொட்டிபாலத்தில் கனமழையால் சரிந்த பாறைகள்

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளக்காலங்களில் வரும் உபரி-நீரை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்திலுள்ள வறட்சி-யான பகுதிகளுக்கு நீர் வழங்கும் வகையில் எண்ணேக்கொள் கால்வாய் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.இதில், எண்ணேக்கொள் தடுப்பணையின் வலது புறத்தில், 50.65 கி.மீ., இடதுபுறத்தில், 22.67 கி.மீ., தொலைவிற்கும் என மொத்தம், 73.32 கி.மீ., தொலைவிற்கு பிரதான கால்வாய்கள் மற்றும் தொட்டிப்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. அணைக்கட்டின் வலது புற கால்வாய், பெல்லம்பள்ளி, கூளியம், பன்னிஹள்ளி மற்றும் கரடிஹள்ளி கிராமங்களின் வழியாக, தர்ம-புரி மாவட்டம் தும்பலஹள்ளி அணையை சென்றடைகிறது.இதில், கத்தேரி மலையில், 2 கி.மீ., துாரத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் தொட்டிப்பாலம் கட்டும் பணி நடக்கிறது.கடந்த சில நாட்களுக்கு முன் அணை மற்றும் அதன் சுற்றுவட்டா-ரங்களில் பெய்த கனமழையால், கத்தேரி மலையில் இருந்த பாறைகள், தொட்டிப்பாலம், கால்வாய் உட்பட, 3 இடங்களில் சரிந்தது. அப்பகுதிகளை, கிருஷ்ணகிரி தாசில்தார் வளர்மதி, நீர்வ-ளத்துறை உதவி பொறியாளர் சையத் ஜஹீருதின் ஆய்வு செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை