வனத்தில் அழுகிய ஆண் சடலம்
ஓசூர்: அஞ்செட்டி வனப்பகுதிக்கு உட்பட்டது கொடகரை. இங்கு வனவர் சரவணன் நேற்று முன்தினம் ரோந்து சென்றார். அப்போது ஆண் உடல் ஒன்று அழுகிய நிலையில் காணப்பட்டது. இது குறித்து அவர் புகார் படி அஞ்செட்டி போலீசார், சடலத்தை மீட்டு, அவர் யார் என விசாரிக்கின்றனர்.