விவசாயியிடம் ரூ.50,000 திருட்டு
கிருஷ்ணகிரி :திருவண்ணாமலை மாவட்டம், ரமண ஆசிரமம் பகுதியை சேர்ந்தவர் மாதவன், 63, விவசாயி. இவர், கடந்த, 25ல், மத்துாரில் இருந்து அரசம்பட்டிக்கு பஸ்சில் சென்றுள்ளார். இரு பெண்கள், அவர் அருகில் நின்றுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் இறங்கி சென்றுள்ளனர். அப்போது, மாதவன் பையில் வைத்திருந்த, 50,000 ரூபாயை காணவில்லை. மாதவன் புகார் படி, மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.