உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு ஊக்கத்தொகை வழங்கி கவுரவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு ஊக்கத்தொகை வழங்கி கவுரவிப்பு

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பாலதொட்டனப்பள்ளி கிராமத்தில் இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர்கள் சார்பில், கடந்த கல்வியாண்டில், 6 முதல், பிளஸ் 2 வரை படித்து பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ், மாவட்ட கல்வி அலுவலர் ரமாவதி, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் ராமமூர்த்தி, ஓய்வு பெற்ற வணிக வரித்துறை இணை ஆணையர் முனிரெட்டி, தனியார் பள்ளி தாளாளர் அஸ்வத் நாராயணா ஆகியோர், மாணவ, மாணவியருக்கு கேடயம், ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினர். முன்னாள் மாணவர் சங்க தலைவர் அஸ்வத் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ