உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக்கிற்கு தீ வைப்பு

பைக்கிற்கு தீ வைப்பு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, செட்டியம்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 28, கூலித்தொழிலாளி. தன் வீட்டின் முன்பு ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் அவரது பைக்கிற்கு தீ வைத்து தப்பினர். பைக் எரிவதை பார்த்த விக்னேஷ் தீயை அணைக்க முயல்வதற்குள் பைக் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து விக்னேஷ் அளித்த புகார் படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிந்து, பைக்கிற்கு தீ வைத்தவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி