உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு ரூ.17.50 லட்சத்தில் ஆடுகள் வழங்கல்

மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு ரூ.17.50 லட்சத்தில் ஆடுகள் வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்திய-வர்களுக்கு மறுவாழ்வு திட்டத்தில், ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், 35 பேருக்கு, 17.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடுகளை வழங்கி பேசுகையில், ''கள்ள மதுபானம் விற்பனையில் ஈடுபட்டு, மனம் திருந்தியோர் மறு வாழ்வு திட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வு செய்யப்-பட்ட, 83 பயனாளிகளில், ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட, 35 பேருக்கு, 50,000 ரூபாய் மதிப்பில், 6 ஆடுகள் வீதம் மொத்தம், 17.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.உதவி ஆணையர் (ஆயம்) பழனி, கோட்ட ஆய அலுவலர்கள் ஓசூர் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி சக்திவேல் உள்ளிட்டோர் உட-னிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை