உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வணிகர் தினத்தை முன்னிட்டுகிருஷ்ணகிரியில் கடைகள் அடைப்பு

வணிகர் தினத்தை முன்னிட்டுகிருஷ்ணகிரியில் கடைகள் அடைப்பு

கிருஷ்ணகிரி:ஆண்டுதோறும் மே, 5ல், வணிகர் தினம் கடைபிடிக்க படுகிறது. அதன்படி நேற்று வணிகர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, சென்னை சாலை, காந்தி சாலை, சேலம் சாலை, சப் ஜெயில் ரோடு, ராயக்கோட்டை சாலை என நகரின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.ஜவுளி கடைகள், நகை கடைகள், பல்பொருள் அங்காடிகள் உள்பட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஓட்டல்கள், மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை பொருட்கள் கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. மத்தூர், போச்சம்பள்ளியில்நேற்று வணிகர் தினம் என்பதால், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. அதேபோல் போச்சம்பள்ளியில் சந்தூர், கல்லாவி, திருப்பத்தூர், தர்மபுரி, காரிமங்கலம் உள்ளிட்ட சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்கள், சிறு, சிறு கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மத்தூர், போச்சம்பள்ளி பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவே இருந்தது. இதனால் வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி