மேலும் செய்திகள்
தனியார் எஸ்டேட் ஓடை: காட்டு யானை உயிரிழப்பு
05-Nov-2026
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட, யு-புரம் வனப்பகுதியிலிருந்து, யானைகள் வெளியோறாமல் இருக்க, இரும்பு ரோப் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில், நேற்று முன்தினம் காலை, 9 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நோய்வாய்ப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்தது. அதை மீட்டு, ஓசூர் வனக்கோட்ட உதவி கால்நடை மருத்துவர் ஜெயசந்திரன் தலைமையில், வனச்சரகர் முனியப்பன் மற்றும் வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். ஆனால், யானை சிறிது நேரத்தில் உயிரிழந்தது. அதனால், யானையின் இரு தந்தங்களும் அகற்றப்பட்டு, அதே இடத்தில் பொக்லைன் மூலம் குழிதோண்டி புதைக்கப்பட்டது. யானை இறப்பிற்கான காரணம், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தான் தெரியவரும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
05-Nov-2026