மேலும் செய்திகள்
விவசாயி மர்மச்சாவு
05-Oct-2025
தனியார் ஊழியரிடம் ரூ.8.11 லட்சம் மோசடி
05-Oct-2025
மைதானத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்
05-Oct-2025
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த ஜம்பு குட்டப்பட்டியை சேர்ந்தவர் சத்யா, 20; இவர் கடந்த, 8ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இது குறித்து சத்யாவின் பெற்றோர் போச்சம்பள்ளி போலீசில் புகாரளித்தனர். அதில், ஜம்பு குட்டப்பட்டியை சேர்ந்த ரஞ்சித், 25 என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.பைக் மீது அரசு பஸ் மோதல்
தனியார் நிறுவன ஊழியர் பலி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அலசநத்தம் ராயல் சிட்டி பகுதியை சேர்ந்தவர் அருண், 30; தனியார் நிறுவன ஊழியர்; இவர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, பல்சர் பைக்கில் ஜூஜூவாடியில் உள்ள போக்குவரத்து சோதனைச்சாவடி அருகே சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ், அவர் சென்ற பைக்கின் பின்னால் மோதியது. இதில் படுகாயமடைந்த அருண், ஓசூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரிக்கிறார்.6 மாத குழந்தையுடன்
இளம்பெண் மாயம்
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த மூன்றாம்பட்டி, தளபதி நகரை சேர்ந்தவர் சுரேகா, 22. இவருக்கு திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர். இவர் தன், 6 மாத ஆண் குழந்தையுடன் கடந்த மே, 27ல், வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார்; மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சுரேகாவின் தாய், சிங்காரப்பேட்டை போலீசில் புகாரளித்தார். அதில் விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த விஜய் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
சேதமான தொகுப்பு வீடுகள்
புதிதாக கட்டித்தர கோரிக்கை
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே, ஊடேதுர்க்கம் ஊராட்சி ஊ.குருபரப்பள்ளி கிராம பழங்குடியின மக்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:மிகவும் பின்தங்கி நிலையிலுள்ள எங்களுக்கு அரசு, இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில், 1994ல், 9 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. 30 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது ஒவ்வொரு வீட்டிலும், 3 குடும்பத்தினர் இட நெருக்கடியில் வசிக்கிறோம். தற்போது எங்கள் வீடுகளின் கூரைகள் பெயர்ந்து அடிக்கடி விழுவதால், குழந்தைகளுடன் அச்சத்துடன் வசிக்கிறோம். சேதமான நிலையிலுள்ள வீடுகளை அகற்றி விட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.3 குழந்தைகளின் தாய் மாயம்
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த எக்கூர், காந்தி நகரை சேர்ந்தவர் நந்தினி, 26. இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த, 1ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து நந்தினியின் தாய், சிங்காரப்பேட்டை போலீசில் நேற்று முன்தினம் புகாரளித்தார். அதில் கோவையை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.3 மாதங்களுக்கு பின்
மக்கள் குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி: லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதால், 3 மாதங்களுக்கு பிறகு நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம், 274 மனுக்களை வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க, துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025