உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்

நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்

அஞ்செட்டி, ஓசூர் வனக்கோட்ட வனத்துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை ஆகியவை சார்பில், பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, அஞ்செட்டி அருகே சேசுராஜபுரத்தில், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடந்தது. ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் தலைமை வகித்தார்.உதவி வன பாதுகாவலர் யஸ்வந்த் ஜெகதீஷ் அம்புல்கர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மாதேஸ்வரன், அஞ்செட்டி வனச்சரகர் கோவிந்தன் மற்றும் வனத்துறையினர், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பழங்குடியின மக்களுக்கு விளக்கி கூறினர். முகாமில், 30 பழங்குடி மலைவாழ் மக்கள் மற்றும் 10 பழங்குடி அல்லாதோர் நல அட்டை பெற, தொழிலாளர் நலத்திட்டத்தில் உறுப்பினராக பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை