உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம்

அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம்

ஓசூர்:ஓசூர் அருகே மோரனப்பள்ளி ராகு, கேது அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில், நவராத்திரி விழா நடந்து வருகிறது. துர்காஷ்டமியை முன்னிட்டு நேற்று கோவிலில் தனி சன்னதியிலுள்ள துர்க்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.அதேபோல், பேரண்டப்பள்ளி சிவசக்தி நகரில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவ துர்க்கை யாகம் நடந்தது. தொடர்ந்து, 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்ற சிறப்பு லட்சார்ச்சனை வழிபாடுகள் மற்றும் திருவிளக்கு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை