உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ராமநவமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை

ராமநவமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நேதாஜி ரோட்டில் உள்ள சீதா லட்சுமண சமேத கோதண்டராம சுவாமி கோவிலில், ராமநவ-மியை முன்னிட்டு நேற்று காலை மூலவருக்கு சிறப்பு பூஜை, அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரி-சையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர்கள் கல்பனா நீலகண்டன், சுந்தரம், முனிராஜ், திருப்பணிக்குழு நிர்வாகி சூர்யகணேஷ், அர்ச்சகர்கள் கேசவன், ரகுராமன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.அதேபோல், கெலமங்கலம் அருகே ஒசபுரத்தில் உள்ள சீதா சமேத ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்தில் உள்ள, 32 அடி உயர வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது.சூளகிரி கீழ் தெருவில் உள்ள சீதா, ராம ஆஞ்சநேய சுவாமி கோவிலில், நேற்று காலை சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்க-ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஓசூர் ஏரித்தெரு ஆஞ்ச-நேயர், ராயக்கோட்டை சாலை பண்டாஞ்சநேயர், மாருதி நகர் பக்த ஆஞ்சநேயர், கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஸ்-வர சுவாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களில், ராம நவ-மியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.* கிருஷ்ணகிரி, பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திரர் கோவிலில், ராம ஜனன மஹோத்ஸவ விழா நேற்று துவங்கியது. இதையொட்டி நேற்று காலை, 8:00 மணிக்கு, கணேஷ ஹோமம், நவக்கிரஹ ஹோமம் மற்றும் கல-சஸ்தாபனத்துடன் ராமநவமி உற்சவம் நடந்தது. சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை, 7:00 மணிக்கு, ஓசூர் ஸ்ருதியின் ராமாமிர்தம் இசை சொற்பொழிவு நடந்தது. இன்று (ஏப். 7) முதல் வரும், 11 வரை, மாலை, 7:00 மணிக்கு கும்பகோணம் கோவிந்தபுரம் ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜின் சிஷ்யர் கோபால்தாசின் சொற்பொழிவு நடைபெறுகிறது. 12ல், சீதா திருக்கல்யாணம், 13ல், ஸ்ரீஹரி வாயுஸ்துதி பாராயணம், 14ல், ராமர் பட்டாபிேஷகம் நடைபெற உள்ளது. 15 காலை, அன்னமய்யா கீர்த்தனை, இரவு, 8:00 மணிக்கு சயன உற்சவம், 16ல், வஸந்த உற்சவம், 17ல், ஆஞ்சநேய உற்சவம், 18ல், ராக-வேந்திரர் உற்சவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ராம ஆஞ்ச-நேய ேசவா சமிதி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.*கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை செந்தில்நகர் உடுப்பி கிருஷ்ணர், ஆஞ்சநேயர், ராகவேந்திர ஸ்வாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனத்தில், 69ம் ஆண்டு ராம நவமி விழா நேற்று நடந்தது. இதையொட்டி பஞ்சாமிர்த அபிேஷகம் நடந்தது, பின், சத்தியநாராயண பூஜை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது.* காவேரிப்பட்டணம் ஒன்றியம், சப்பாணிப்பட்டி கோதண்ட-ராமர் கோவிலில், 18ம் ஆண்டு ராம நவமி விழா நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலர் சுப்பிரமணி, அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி ஆயிர வைசிய நகர சமூக கோதண்ட ராமசுவாமி பஜனை கோவிலில், நாரனப்ப செட்டி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், திருவண்ணாமலை சாலையில், ராம நவமி விழா நடந்தது. இதில், ராமர் படம் வைத்து சிறப்பு பூஜை செய்து பக்தர்க-ளுக்கு, நீர்மோர், பானகம், லெமன் சாதம், பழச்சாறு, பஞ்சா-மிர்தம் வழங்கினர். தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சங்கரா அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் பாண்டு-ரங்கன் உள்பட பலர் பங்கேற்றனர்.* தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில் சீதா, ராம ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்-தது. நேற்று உற்சவ மூர்த்தி, அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் மாலையில் நிலையை அடைந்தது.* ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளியில் உள்ள திம்மராய சுவாமி கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நேற்று நடந்தது. பின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய பெருமாள் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை