உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மத்துார், காவேரிப்பட்டணத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

மத்துார், காவேரிப்பட்டணத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, நாகம்பட்டி, கண்ணடஹள்ளி பஞ்.,களுக்கு, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று கண்ணடஹள்ளி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமில், 12 அரசு துறைகளின், 45 சேவைகளை வழங்கும் விதமாக, துறை சார்ந்த அதிகாரிகள் வந்திருந்தனர்.பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, 250க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். இதில் மத்துார் பி.டி.ஓ.,க்கள் சாவித்திரி, செல்லக்கண்ணாள் மற்றும் தி.மு.க., ஒன்றிய செயலாளர் வசந்தரசு, செந்தில், விஜயலட்சுமி பெருமாள், முன்னாள் பஞ்., தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, நெடுங்கல், மாரிசெட்டிஹள்ளி, தளிப்பட்டி, பென்னேஸ்வரமடம் உள்ளிட்ட பஞ்.,களுக்கு, நெடுங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடந்தது. இதில், 400க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.இதில் காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., சரவணன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் மகேந்திரன், கிருஷ்ணகிரி சமூக பாதுகாப்பு தாசில்தார் மகேஸ்வரி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ