மேலும் செய்திகள்
சென்றாய சுவாமி கோவில் புனரமைப்பு பணிக்கு பூஜை
18-Jul-2025
போச்சம்பள்ளி, மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, சிவம்பட்டி, பொம்மேபள்ளி பஞ்.,களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று சிவம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, 350க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். மத்துார் பி.டி.ஓ.,க்கள் சாவித்திரி, செல்லக்கண்ணாள் மற்றும் தி.மு.க., ஒன்றிய செயலாளர் வசந்தரசு, சங்கர், முன்னாள் பஞ்., தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். * ஊத்தங்கரை அடுத்த, அனுமன் தீர்த்தம் பகுதியில் நடந்த முகாமிற்கு, ஊத்தங்கரை தாசில்தார் மோகன்தாஸ் தலைமை வகித்தார். பி.டி.ஓ., பாலாஜி, தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், 15க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தெற்கு ரஜினி செல்வம், மத்திய எக்கூர் செல்வம், வடக்கு மூன்றம்பட்டி குமரேசன், மாவட்ட பொருளாளர் கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
18-Jul-2025