மேலும் செய்திகள்
ஓசூரில் மாநில அளவிலான கேரம், வாள்சண்டை போட்டி
29-Jan-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி பிரிவு சார்பில் மாநில அளவில், 14, 17, 19 வயதிற்கு உட்பட்டோருக்-கான பிரிவுகளில் குடியரசு தினம், பாரதியார் தினத்தையொட்டி கடந்த ஜன., 28 முதல், 31 வரை சிவகங்கை மற்றும் மயிலாடு-துறை மாவட்டங்களில், டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டை விளையாட்டு போட்டிகள் நடந்தன. அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் பங்கேற்று மாநில அளவில் வெற்றி பெற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்ற மாணவ, மாணவியரை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜ-கோபால், டேக்வாண்டோ பயிற்சியாளர் சங்கர், குத்துச்சண்டை பயிற்சியாளர் முனிராசு, கைப்பந்து பயிற்சியாளர் முனிராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
29-Jan-2025