மேலும் செய்திகள்
ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்
23-Apr-2025
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு தாசில்தார் பாரதி மற்றும் அலுவலர்கள் சாமந்தமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற பிக்கப் வேனை சோதனையிட்டதில், ஒரு யூனிட் அளவில் பென்சிங் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. பாரதி புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் பிக்கப் வேனை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளப்பிரிவு உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அலுவலர்கள் கிருஷ்ணகிரி டோல்கேட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள தர்கா அருகில் என்ற பிக்கப் வேனை சோதனையிட்டதில் ஒரு யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. சரவணன் புகார் படி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், பிக்கப் வேனை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
23-Apr-2025