கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இது குறித்து, முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் நடப்பாண்டிற்கான இளங்கலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி., (கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியியல், புள்ளியியல், தாவரவியல், விலங்கியல்), பி.ஏ., (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை ஆன்லைனில் விண்ணப்பிக்காத மாணவர்கள், கல்லுாரிக்கு நேரில் வந்து விண்ணப்பித்து, அன்றே மாணவர் சேர்க்கை பெறலாம். மாணவர்கள் வரும் போது, உரிய அனைத்து சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல் (மாற்றுச்சான்றிதழ், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், மார்பளவு புகைப்படம் 4) 3 செட் எடுத்து வர வேண்டும். சேர்க்கைக் கட்டணமாக கலைப்பிரிவுக்கு, 2,905 ரூபாய், அறிவியல் பாடப்பிரிவுக்கு, 2,925 ரூபாய், கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு, 2,025 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.