மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திண்டுக்கல்
31-Oct-2025
பாகலுார், ஓசூர் அருகே, பாகலுார் அம்பேத்கர் நகரை சேர்ந்த பாண்டியன் மகன் மணிசங்கர், 13. தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படித்தார். நேற்று விடுமுறை என்பதால், தன் நண்பரான அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் சீனிவாசன், 13, என்பவருடன், மதியம், 1:00 மணிக்கு மேல், பாகலுார் பட்டாளம்மன் ஏரிக்கு குளிக்க சென்றார்.மதியம், 2:00 மணியளவில், ஆழமான பகுதிக்கு சென்ற மாணவன் மணிசங்கர், நீரில் மூழ்கி பலியானார். ஓசூர் தீயணைப்புத்துறையினர் நேற்று மாலை, 4:00 மணிக்கு மாணவன் சடலத்தை மீட்டனர். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
31-Oct-2025