உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நீர்த்தேக்க தொட்டியில் மாணவர்கள் குளியல்

நீர்த்தேக்க தொட்டியில் மாணவர்கள் குளியல்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி., அணை, பாரூர் பெரிய ஏரி மற்றும் மாவட்டத்தில் உள்ள, 50 சதவீத ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. அவைகளில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சென்று குளிக்காத வகையில், பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என, கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் தகவல் வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் ஏரி மற்றும் நீர்நிலைகளுக்கு செல்லாமல், போச்சம்பள்ளி அடுத்த சந்தம்பட்டி கிராமத்தில், போச்சம்பள்ளி செல்லும் சாலை ஓரத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, தரையில் நீர்த்தேக்க தொட்டி கட்டி, அதன் மூலம் விவசாயி ஒருவர் விவசாயம் செய்து வருகிறார். இதில் அதே பகுதியை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆனந்த குளியல் போட்டு சந்தோஷத்தை அனுபவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !