உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முறையாக வராத டவுன் பஸ்சை மறித்து மாணவர்கள் மறியல்

முறையாக வராத டவுன் பஸ்சை மறித்து மாணவர்கள் மறியல்

ஓசூர், ஓசூர் அடுத்த புனுகன்தொட்டியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஓசூர், ஆர்.வி., மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் அவ்வழியாக செல்லும், 21ம் எண் அரசு டவுன் பஸ்சில் சென்று வருகின்றனர். ஆனால் பஸ் சரியான நேரத்திற்கு வராததால், பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதை கண்டித்து புனுகன்தொட்டி அருகே நேற்று காலை வந்த அந்த அரசு டவுன் பஸ்சை மறித்து, பள்ளி மாணவ, மாணவியர் பெற்றோருடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஓசூர் ஹட்கோ போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இதுபோல் நடக்காது என சமாதானம் செய்து, மாணவர்களை அதே அரசு டவுன் பஸ்சில் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை