மேலும் செய்திகள்
ஸ்ரீவி., குறவன் குட்டையில் யானை நடமாட்டம்
17-Oct-2025
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாரச்சந்திரம் காப்புக்காட்டில், நான்குக்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனத்தை ஒட்டிய விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே மாரச்சந்திரம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி முன்புறம், தாயிடம் இருந்து பிரிந்த, 4 வயதுக்கு உட்பட்ட குட்டி யானை உலா வந்தது. இதை பார்த்த மாணவ, மாணவியர், பள்ளியில் இருந்தவாறு ஆனந்த கூச்சலிட்டனர்.வனத்துறையினர் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் யானையை விரட்டினர். குட்டி யானையை பார்க்க கூட்டம் கூடியதுடன், மொபைல்போனில் வீடியோ எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாரச்சந்திரம் வனத்தில் முகாமிட்டுள்ள யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
17-Oct-2025