ஓசூர் ஆர்.வி., அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட ஆய்வு
ஓசூர், சகிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், புதிய வகுப்பறைகள், கழிவறைகள் கட்ட வேண்டும் என, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஓசூர் மாநகர மேயர் சத்யா நேற்று திடீர் ஆய்வு செய்து, அங்குள்ள கட்டடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கட்டடங்களை இடிப்பது குறித்தும், மாணவர்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை ஆய்வு செய்த அவர், உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். மாநகராட்சி மண்டல தலைவர் ரவி, பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார், கல்வி குழு தலைவர் ஸ்ரீதரன், கவுன்சிலர் ராஜா உட்பட பலர் உடன் இருந்தனர்.