உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசுப்பள்ளிக்கு புதிய இடம் தேர்வு செய்ய ஆய்வு

அரசுப்பள்ளிக்கு புதிய இடம் தேர்வு செய்ய ஆய்வு

கிருஷ்ணகிரி, டிச. 26-காலைக்கதிர் செய்தி எதிரொலியாக கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, கல்வி அதிகாரிகள் புதிய இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி பஞ்.,ல், கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, மாற்றுத்திறன் பயிற்சி பள்ளி உள்ளிட்டவை ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இதனால், மாணவர்கள் அமர இடமின்றி வெட்டவெளியில் அமர்ந்து கல்வி கற்பது குறித்து நேற்று முன்தினம் காலைக்கதிரில் செய்தி வெளியானது. இதையடுத்து கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், சி.இ.ஓ., முனிராஜ், கிருஷ்ணகிரி தாசில்தார் வளர்மதி, அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர் சர்தார் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் உயர்நிலைப்பள்ளி சார்பில் ஏதேனும் இடங்களை தேர்வு செய்து மனு அளித்துள்ளார்களா எனவும் கேட்டறிந்தனர். தொடர்ந்து, அதேபகுதியில் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மற்றும் மற்றும் இரு இடங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை ஆய்வு செய்தனர். விரைவில் உயர்நிலைப்பள்ளி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றனர்.உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கிரிஜா லட்சுமி, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி