திருவிழாவில் சுவாமி ஊர்வலம்
பாப்பிரெட்டிப்பட்டி,கடத்துாரில் காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.தொடர்ந்து சுவாமிக்கு கருவறை அலங்காரம், காளியம்மன் காளஸ்திரி ஞான பிரசன்னாம்பிகையாகவும், மாரியம்மன் பண்ணாரி அம்மனாகவும், பக்தர்களுக்கு காட்சியளித்தார். நவதுர்கா தேவி, 18 கரகங்களுடன் காட்சி அளித்தார். நேற்று பால்குட ஊர்வலமும், அம்மனுக்கு மகா அபிஷேக ஆராதனை நடந்தது.பின் பக்தர்கள் மாரியம்மன் காளியம்மன், அங்காள பரமேஸ்வரி, பத்ரகாளி, பெருமாள், முருகப்பெருமாள், ஆஞ்சநேயர் போன்ற சுவாமி வேடமணிந்து செண்டை மேளம் முழங்க அம்மன் திரு வீதி உலா நடந்தது. இதில் பக்தர்கள் ஆடல் பாடலுடன் ஊர்வலமாக வந்தனர்.