உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ராமாபுரம் அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி

ராமாபுரம் அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் கூடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், காவேரிப்பட்டணம் போலீஸ் எஸ்.ஐ., அறிவழகன் மற்றும் போலீஸ்காரர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் மற்றும் தமிழ் ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.நிகழ்ச்சியில், சங்க இலக்கியங்களில் கல்வி மற்றும் ஒழுக்கம் குறித்தும், நம் தமிழரின் கலாசாரம் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய கல்வி சார்ந்த ஒழுக்கம், நெறிமுறைகள் பற்றியும், எஸ்.ஐ., மாணவர்களிடம் எடுத்துரைத்து, சிறப்பாக செயல் புரிந்த மாணவ, மாணவியருக்கு பரிசு தொகையும் வழங்கினார். ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை