ரூ.49.96 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை பணி துவக்கம்
ஓசூர், ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட மோரனப்பள்ளியில், 49.96 லட்சம் ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்தார். ஓசூர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் நாகேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரவி, சம்பத், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.