கிருஷ்ணகிரியில் தாயுமானவர் திட்டம்
கிருஷ்ணகிரி: அதை தொடர்ந்து கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடை எண். 12க்கு உட்பட்ட பகுதியில், 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இது குறித்து கலெக்டர் தினேஷ்குமார் கூறுகையில், “வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களின் இல்-லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்-களை ஒவ்வொரு மாதமும், 2வது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழ-மைகளில் வாகனங்கள் மூலம் தகுதியுள்ள பயனாளர்களின் இல்-லத்திற்கே சென்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் வினி-யோகம் செய்வர்,” என்றார்.மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, கூட்டுறவு சங்கங்-களின் இணைப்பதிவாளர் நடராஜன், நகராட்சி தலைவர் பரிதா-நவாப், கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர செயலாளர் அஸ்லம் உள்பட பலர் கலந்து கொண்டனர். * காவேரிப்பட்டணத்தில் தாயுமானவர் திட்டத்தை டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் துவக்கி வைத்தனர். * ஓசூர் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வரர் நகரில், 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் துவக்கி வைத்து, ரேஷன் பொருட்கள் வழங்கினார்.--* ஊத்தங்கரை பேரூராட்சியில், பேரூராட்சி தலைவர் அமா-னுல்லா துவக்கி வைத்தார். கூட்டுறவு சார் பதிவாளர் கார்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.