உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இரவில் போன் செய்த கவுன்சிலர் மாநகராட்சி கமிஷனர் கோபம்

இரவில் போன் செய்த கவுன்சிலர் மாநகராட்சி கமிஷனர் கோபம்

ஓசூர்:இரவில் போன் செய்த கவுன்சிலரை மாநகராட்சி கூட்டத்தின்போது, கமிஷனர் கண்டித்தார். கிருஷ்ணகிரி மா வட்டம், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், மேயர் சத்யா தலைமையில்நடந்தது. கூ ட்டத்தில் நடந் த விவாதம் வருமாறு: அ.தி.மு.க., கவுன்சிலர் சிவராம்: கமிஷனரை, 30 முறை சந்திக்க வந்தேன். ஒரு முறை கூட அவர் சீட்டில் இல்லை. போன் செய்தாலும் எடுக்கவில்லை. கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம்: இரவு, 8:30 மணிக்கு ஏன் போன் செய்தீர்கள். போன் செய்யாதீர்கள். கவுன்சிலர் சிவராம்: எப்போது போன் செய்ய வேண்டும் என நீங்கள் கூறுங்கள். அப்போது குறுக்கிட்ட மேயர் சத்யா, “நடவடிக்கை எடுக்க வேண்டியது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தான். தனியார் நிறுவனங்களில், கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்,” என்று கூறி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ