கனமழையால் இடிந்த ஜி.ஹெச்., காம்பவுண்ட் அதிகாரிகள் அலட்சியத்தால் நேர்ந்த அவலம்
ஓசூர்: ஓசூரிலுள்ள தேன்கனிக்கோட்டை சாலையோரம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்குகிறது. இங்கு தினமும், 1,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 200க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.மருத்துவமனையின் முகப்பு பகுதியில், அன்னிய நபர்கள் உள்ளே வராமல் இருக்க காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டிருந்-தது. தேன்கனிக்கோட்டை சாலையில் கடந்த பிப்., மாதம் மாநில நெடுஞ்சாலைத்துறை கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது, பலவீனமாக இருந்த காம்பவுண்ட் சுவரில், 50 அடி துாரம் இடித்து விழுந்தது. மீதமுள்ள காம்பவுண்ட் சுவரும் மோசமாக இருந்ததால், மொத்தமாக இடித்து விட்டு, புதிதாக கட்ட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஓசூரில் உள்ள ராயக்கோட்டை சாலையில், காரப்பள்ளி அருகே, 100 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்படுகிறது. அதனால், மருத்துவமனை இடம் மாற உள்ளது எனக்கூறி, இடிந்த காம்பவுண்ட் சுவரை கூட கட்ட, அதிகாரிகள் முன்வரவில்லை. இந்நிலையில், மருத்துவமனை முகப்பு பகுதியில் பலவீனமாக இருந்த மேற்கொண்டு, 50 அடி துார காம்பவுண்ட் சுவர், கனம-ழைக்கு நேற்று கீழே சாய்ந்து விழுந்தது. இதில் சாலையோரம் நிறுத்தியிருந்த தள்ளுவண்டி மற்றும் ஒரு பைக் சேதமானது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.ஓசூர் பழைய தொலைபேசி அலுவலக சாலையோரம் உள்ள மருத்துவமனையின் காம்பவுண்ட் சுவர், சாய்ந்த நிலையில் மோச-மாக உள்ளது.அதுவும் இடிந்து விழும் முன் இடித்து விட்டால், உயிர் சேதத்தை தவிர்க்கலாம் என, மக்கள் கூறுகின்றனர். தற்போது மருத்துவமனை முகப்பு பகுதி, 100 அடி துாரத்திற்கு காம்-பவுண்ட் சுவர் இல்லாமல் இருப்பதால், நோயாளிகளுக்கு பாது-காப்பற்ற நிலை உருவாகி உள்ளது.