மேலும் செய்திகள்
மழையில் இடிந்த வீடு காயத்துடன் தப்பிய சிறுமி
13-Dec-2024
மகம் | பெண்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் !
17-Dec-2024
கிருஷ்ணகிரி: குறைந்த வயதில், 429 பொருட்களை அடையாளம் காட்டியதற்-காக, ஒரு வயது, 7 மாத குழந்தைக்கு, 'இந்தியா புக்ஆப் ரெக்கார்ட்' சான்றிதழ் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்தவர் போலீஸ்காரர் தேவராஜ், 30. இவரது மனைவி பிரியங்கா, 30. இவர்களது மகள் தமிழ் யாழினி; ஒரு வயது, 7 மாத பெண் குழந்தை. இக்குழந்தைக்கு அவரது தாய், 6 மாத குழந்தையாக இருந்த போதே, பார்க்கும் பொருட்களை சுட்டிக்காட்டி பெயரை உச்ச-ரித்து வந்துள்ளார். கடந்த, 4 மாதங்களாக, பறவை, விலங்கு, காய்கறி உள்ளிட்ட பொருட்களின் பெயர்களை தீவிரமாக கற்றுக் கொடுத்து வந்தார். தற்போது இக்குழந்தை, பறவைகள், விலங்-குகள், காய் கறி, பழங்கள், தேசிய சின்னங்கள் என மொத்தம், 417 பொருட்கள் மற்றும், 12 உடல் பாகங்களை அடையாளம் காட்டியுள்ளது. இவற்றை வீடியோ எடுத்து ஹரியானா மாநிலத்தில் இயங்கி வரும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்திற்கு அனுப்பியுள்-ளனர். குறைந்த வயதில், 429 பொருட்களை அடையாளம் காட்டி-யதற்காக, குழந்தை தமிழ் யாழினிக்கு, இந்தியா புக்ஆப் ரெக்கார்ட் சான்றிதழ், பென், ஐடி கார்டு மற்றும் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது. இது குறித்து பிரியங்கா கூறுகையில், ''இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டில் இதற்கு முன்பு, ஒரு வயது, 9 மாத குழந்தை, 10.5 நிமிடத்தில், 100 பொருட்களை அடையாளம் காட்டியது சாதனையாக உள்ளது. ஆனால், தமிழ் யாழினி, 7.58 நிமிடத்தில், 113 பொருட்களை அடையாளம் காட்டுகிறார். இந்த சாதனை வீடியோவை இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டுக்கு அனுப்பி-யுள்ளோம். அடுத்ததாக, கின்னஸ் சாதனைக்காக குழந்தைக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்,'' என்றார்.
13-Dec-2024
17-Dec-2024