வனக்காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது
ஓசூர், நவ. 12-கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம், காளிகட்டம் வடக்கு பீட் வன காவலராக பணியாற்றி வருபவர் கோபிநாத், 34. கடந்த, 9 இரவு, 9:00 மணிக்கு, யானைகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மாரச்சந்திரம் கிராமத்தில் செவன்த் டே பள்ளி அருகே உள்ள அப்பகுதியை சேர்ந்த பைராஜ், 48, என்பவரது நிலத்திற்கு சென்றார். அங்கிருந்த பைராஜ், வன காவலர் கோபிநாத்துடன் தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தையால் திட்டி, அவரை பணி செய்ய விடாமல் தடுத்தார். வனக்காவலர் கோபிநாத் புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, பைராஜை கைது செய்தனர்.