உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஏரி உபரி நீரில் சென்ற மீன்களை ஆர்வமாக பிடித்த பொதுமக்கள்

ஏரி உபரி நீரில் சென்ற மீன்களை ஆர்வமாக பிடித்த பொதுமக்கள்

தர்மபுரி, டிச. 4-தர்மபுரி மாவட்டத்தில், பெஞ்சல் புயலால் தொடர்ந்து பெய்த கனமழையால், பல ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகிறது. தர்மபுரி அடுத்த பிடமனேரி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால், ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் உபரி நீரானது, பழைய தர்மபுரியிலுள்ள ராமக்காள் ஏரிக்கு செல்கிறது. தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், இந்த ஏரியும் ஒரே நாளில் நிரம்பியது. இந்த, 2 ஏரிகளில் இருந்த மீன்கள் உபரி நீர் வெளியேறும் இடத்தில் வெளியே வந்து தென்பெண்ணையாற்றுக்கு சென்றது. இதைக்கண்ட பொதுமக்கள் மற்றும் அருகில் வசிக்கும் மக்கள், வெளியேறிய மீன்களை பிடிக்க ஆர்வம் காட்டினர். பழைய தர்மபுரியை சேர்ந்த சிலர், மீன் வலைகளையும், துணிகளையும் கொண்டு மீன் பிடித்தனர். சாலையில் சென்ற பொதுமக்கள் கைகளிலேயே மீன் பிடித்து, வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை