உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சுட்டெரித்த வெயிலால் வீதிகள் வெறிச்

சுட்டெரித்த வெயிலால் வீதிகள் வெறிச்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் நேற்று சுட்டெரித்த வெயிலால், நகரின் முக்கிய வீதிகளில் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பகலில் கடும் வெயிலும் மாலையில் மழையும் பெய்து வந்தது. பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேர மழையால், வெப்பம் தணிந்து காணப்பட்டது. ஆனால், கடந்த இரு நாட்களாக வெயில் வெளுத்து வாங்கியது. நேற்று கிருஷ்ணகிரியில், 39 டிகிரி செல்ஷியஸ் அதாவது, 102.2 பாரன்ஹீட் அளவில் வெயில் கொளுத்தியது.கிருஷ்ணகிரி நகரில், பரபரப்பாக காணப்படும் பெங்களூரு சாலை, சேலம் சாலை, சென்னை சாலை, காந்தி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நேற்று மதியம் முதல் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. சாலையோர கடைகள் வைத்திருப்பவர்கள் சாலையோரத்திலும், கடைகளின் பிளாஸ்டிக் கவர் கூரைகள் மீது, நீரை ஊற்றியவாறும் அமர்ந்திருந்தனர். பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால், வெளியே செல்வதை தவிர்த்து வீடுகளுக்குள் முடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி