மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 35 பேர் விடுதலை
19-Sep-2024
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அடுத்த கவுதாசபுரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பாகலுார் போலீசார், சடலத்தை மீட்டு விசாரித்தனர்.கொலையானவரை அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக முகத்தை கொலையாளிகள் சிதைத்து இருந்தனர். ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாரேனும் காணாமல் போய் உள்ளனரா என்றும், அருகிலுள்ள கர்நாடக மாநிலத்தில் மாயமானவர்களின் தகவல்களையும் போலீசார் சேகரித்து, விசாரிக்கின்றனர்.
19-Sep-2024