மேலும் செய்திகள்
பெண்ணை கர்ப்பமாக்கிய காதலனுக்கு காப்பு
19-Oct-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கொடமாண்டப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் முபாரக், 29. இவர் சிவகங்கையிலுள்ள ஒரு ஜவுளி கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும்போது, அப்பகுதியை சேர்ந்த, 19 வயது இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அப்பெண் கர்ப்பமானார். கருவை கலைத்து விட, அதற்கான மருந்தை முபாரக், கொடுத்துள்ளார். ஆனால் மருந்தை வாங்க மறுத்த அப்பெண், முபாரக்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார். முபாரக் மறுத்து விட்டார். அப்பெண் புகார் படி, போச்சம்பள்ளி போலீசார் முபாரக்கை கைது செய்தனர்.
19-Oct-2024