உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க.,வில் பதவிக்கு ஆசைப்பட்டு வந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனரே தவிர பிளவு இல்லை

அ.தி.மு.க.,வில் பதவிக்கு ஆசைப்பட்டு வந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனரே தவிர பிளவு இல்லை

'அ.தி.மு.க.,வில் பதவிக்கு ஆசைப்பட்டு வந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனரே தவிர பிளவு இல்லை'கிருஷ்ணகிரி, அக். 22-''அ.தி.மு.க.,வில் பதவிக்கு ஆசைப்பட்டு வந்தவர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனரே தவிர, கட்சியில் பிளவு இல்லை,'' என, அக்கட்சியினர் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில், வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசியதாவது:ஒவ்வொரு மாவட்டத்திலும், அ.தி.மு.க.,வின், 53வது ஆண்டு துவக்க விழா, செயல்வீரர்கள் கூட்டம் நடந்து வருகிறது. ஒற்றுமையுடன் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். ஆனால், அ.தி.மு.க., மூன்றாக, நான்காக உடைந்து விட்டது என சிலர் பேசி வருகின்றனர். அ.தி.மு.க.,வில் பதவிக்கு ஆசைப்பட்டு வந்தவர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனரே தவிர, கட்சியில் பிளவு இல்லை. கட்டுக்கோப்போடு உள்ள, அ.தி.மு.க., இயக்கத்தை, யாராலும் உடைக்க முடியாது. தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர்.இவ்வாறு, அவர் பேசினார்.வேப்பனஹள்ளி, மேற்கு ஒன்றிய செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன், ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சந்தீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை